பதிவு செய்த நாள்
25
நவ
2024
12:11
திண்டுக்கல் மணக்காட்டூர் அருகே கரந்தமலை வனத்திற்குள் பூரணவள்ளி, சுந்தர வள்ளியுடன் அருள்பாலிக்கிறார் அய்யனார். பக்தர்கள் குழுவாக செல்வது நல்லது. தங்கள் ஊரை காவல் காக்க மணக்காட்டூர் மக்கள் அய்யனாரை பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்தனர். காலப்போக்கில் பலருக்கும் இவர் குலதெய்வமாக மாறிவிட்டார். கோயிலின் அருகே அருவி உள்ளது. அதில் நீராடிவிட்டு திருநீறு அணிந்து அய்யனாரை வணங்கினால் தீராத நோய் தீரும். பின் குதிரை எடுப்பு நடத்தி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். நான்கு ஆண்டுக்கு ஒருமுறை வைகாசியில் திருவிழா நடத்தப்படுகிறது. அன்று அய்யனார் சர்வ அலங்காரத்தில் காட்சியளிப்பார். கோயில் வளாகத்தின் வலதுபுறம் சின்னக்கருப்பு, இடதுபுறம் பெரிய கருப்பு சுவாமி காவல் தெய்வங்களாக உள்ளனர்.
எப்படி செல்வது: நத்தத்தில் இருந்து 21 கி.மீ.,
நேரம்: காலை 9:00 – மாலை 4:00 மணி
தொடர்புக்கு: 80984 76415
அருகிலுள்ள தலம்: நத்தம் மாரியம்மன் 21 கி.மீ.,
நேரம்: காலை 6:00 – 11:00 மணி, மாலை 5:00 – 8:00 மணி
தொடர்புக்கு: 94423 62399.