பதிவு செய்த நாள்
25
நவ
2024
12:11
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் நடூரில் உள்ள, மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம், நாளை மறுநாள், 27ம் தேதி நடைபெற உள்ளது.
மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில், நடூரில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர், விநாயகர், வள்ளி தெய்வானை சமேதராக கல்யாண சுப்பிரமணியர், காலபைரவர் உள்ளிட்ட பரிவார் தெய்வங்களின் சன்னதிகள் உள்ளன. தற்போது கோவில் கும்பாபிஷேகம் வருகிற, 27ம் தேதி நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, இன்று காலை மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமத்துடன் விழா துங்குகிறது. நாளை (26ம் தேதி) காலை இரண்டாம் கால வேள்வி பூஜையும், சுவாமிகளின் சிலைகளுக்கும், கோபுர கலசங்களுக்கும் அபிஷேகம் செய்யப்படுகிறது. 27ம் தேதி காலை திருப்பள்ளி எழுச்சியும், நான்காம் கால யாக வேள்வி பூஜையும் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து 9:00 மணிக்கு யாக சாலையில் இருந்து, தீர்த்த குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து, கோபுர கலசங்களின் மீதும், பரிவார் தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. அதை தொடர்ந்து அபிஷேகமும், அலங்கார பூஜையும், அன்னதானமும் நடைபெற உள்ளது.