பூமிக்கடியில் கண்டெடுக்கப்பட்ட பெருமாள் ஸ்வாமி சிலை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28நவ 2012 10:11
தர்மபுரி: தர்மபுரி அருகே பழைமை வாய்ந்த பெருமாள் ஸ்வாமி சிலை பூமிக்கடியில் கண்டுபிடிக்கப்பட்டது. தர்மபுரி அடுத்த ஏ.கொல்லஹள்ளி பஞ்சாயத்து, மொடக்கேரியில் பழைமை வாய்ந்த இளைய பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் இருந்த பெருமாள் சிலை புதர் மற்றும் மண்ணில் மறைந்தது. அப்பகுதியில் இருந்த ஸ்துபியையும், அதன் முன் இருந்த கல்லை இளைய பெருமாளாக பக்தர்கள் வழிபட்டு வந்தனர். இங்கு புராட்டாசி மற்றும் வாரம் தோறும் சனிக்கிழமைகளில் பக்தர்கள் சிறப்பு பூஜை செய்து வந்தனர். கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, நேற்று கோவில் பகுதியில் இருந்த புதர்களை அப்பகுதியை சேர்ந்தவர்கள் அகற்றினர். அப்போது, பூமிக்கடியில் ஒரு சிலை இருந்தது. மண்ணை தோண்டிய போது, சங்கு, சக்கரத்துடன், இரு அடி உயரம் கொண்ட பெருமாள் சிலை இருந்தது. கார்த்திகை அன்று பல ஆண்டுகளுக்கு முன் வழிப்பட்ட பெருமாள் சிலை மீண்டும் கிடைத்தால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இத்தகவல் அப்பகுதியிலும், அருகில் உள்ள பகுதியிலும் பரவியதை அடுத்த பக்தர்கள் அதிகளவில் திரண்டு வந்தனர். கண்டெடுக்கப்பட்ட சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். தகவல் அறிந்த வருவாய் துறையின் இளைய பொருமாள் கோவிலுக்கு வந்து சிலையின் தன்மை குறித்தும் சிலையுடன் வேறு பொருட்கள் எடுக்கப்பட்டதாத என விசாரித்து சென்றனர்.