மேல்மருவத்தூர்: மேல்மருவத்தூர், ஆதிபராசக்தி கோவிலில், இருமுடி விழா துவங்கியது.மேல்மருவத்தூர், ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆண்டுதோறும், இருமுடி விழா நடந்துவருகிறது. இந்த ஆண்டு, இருமுடிவிழா நேற்றுமுன்தினம் துவங்கியது. ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காருஅடிகளார் பக்தர்களுக்கு மாலை அணிவித்து துவக்கிவைத்தார். வரும் ஜன., 25ம் தேதி வரை, இருமுடி விழா நடைபெறும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, காஞ்சிபுரம் மாவட்ட, ஆதிபராசக்தி வார வழிப்பட்டு மன்றம் சார்பில், அன்னதானம் வழங்கப்படுகிறது. மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில், அனைத்து ரயில்களும் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.