பதிவு செய்த நாள்
26
நவ
2024
01:11
கள்ளக்குறிச்சி மாவட்டம் அகரகோட்டாலத்தில் உள்ளது ஐயனாரப்பன் கோயில். பழமையான இத்தலம் வந்தால் தீராத பிரச்னையும் தீரும். கோயிலின் நுழைவில் நுாற்றுக்கும் மேற்பட்ட சிப்பாய், யானை, குதிரை சிலைகள் உள்ளன. இதன் அருகே கருப்பன், முனியப்ப சுவாமி சிலைகளை பார்க்கவே பிரம்மிப்பாக இருக்கும். சனிக்கிழமையன்று ஐயனாரை தரிசனம் செய்தால் நிலம், உடல்நலம் சம்பந்தமான பிரச்னை தீரும். நீண்ட நாளாக நடைபெறும் வழக்கும் முடிவுக்கு வரும். வேண்டுதல் நிறைவேறியதும் பொம்மை செய்து வைக்கலாம். இப்படி நேர்த்திகடன் செலுத்திய பொம்மைகளை வளாகத்தில் பார்க்கலாம். ஆடியில் சிறப்பு பூஜை, ஒருநாள் திருவிழாவும் நடக்கும்.
எப்படி செல்வது: கள்ளக்குறிச்சி பஸ் ஸ்டாண்டில் இருந்து சிறுவங்கூர் அரசு மருத்துவ கல்லுாரி, மணிமுக்தா அணைக்கு செல்லும் வழியில் 10 கி.மீ.,
நேரம்: காலை 6:30 – மாலை 5:30 மணி
தொடர்புக்கு: 90478 03654
அருகிலுள்ள தலம்: ஆத்துார் தலையாட்டி விநாயகர் 55 கி.மீ.,
நேரம்: காலை 6:00 – 12:00 மணி, மாலை 4:00 – 8:30 மணி
தொடர்புக்கு: 04282 – 320 607