தினமும் ஒரு சாஸ்தா – 10; திருமணம் கைகூட... மணக்கரை சாஸ்தா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25நவ 2024 01:11
துாத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் மணக்கரையில் பூர்ணா புஷ்கலாவுடன் காட்சி தருகிறார் புங்கமுடையார் சாஸ்தா. இவரை வணங்கினால் திருமணம் கைகூடும். வல்லநாடு மெயின் ரோட்டில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையில் தாமிரபரணி நதிக்கரையில் உள்ளது கோயில். இங்கு விநாயகர், முருகனும் உள்ளனர். வளாகத்தில் விஷ்ணுவின் அம்சமாக 25 அடி உயரத்தில் பிரமாண்ட பூதத்தார் சாஸ்தா இருக்கிறார். 11 வாரங்கள் தொடர்ந்து புங்கமுடையார் சாஸ்தாவை வழிபட்டால் திருமணம் நடக்கும். அமாவாசை, பவுர்ணமி, மார்கழியில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. பிரகாரத்தில் கருப்பசாமி, சுடலை மாடசாமி, வீரபுத்திரர், பட்டவராயர் ஆகிய காவல் தெய்வங்கள் உள்ளனர்.
எப்படி செல்வது; ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 6 கி.மீ.,