நஞ்சுண்ட விநாயகர் கோவிலில் மண்டல பூஜை; கரும்பு அலங்காரத்தில் விநாயகர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29நவ 2024 11:11
அன்னூர்; அன்னூர், நஞ்சுண்ட விநாயகர் கோவிலில், கரும்பு அலங்காரத்தில் விநாயகர் அருள்பாலித்தார்.
அன்னூர், தென்னம்பாளையம் சாலையில் உள்ள நஞ்சுண்ட விநாயகர் மற்றும் ஐயப்பன் கோவிலில், பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு, கடந்த 14ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, 15ம் தேதி முதல் மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. வரும் டிச. 8ம் தேதி மண்டல பூஜை நிறைவு விழா நடக்கிறது. அன்றைய தினம், சிறப்பு வேள்வி பூஜை நடக்கிறது. முக்கிய வீதிகளின் வழியாக, ஜமாப் இசை, செண்டை மேளம் மற்றும் வாண வேடிக்கையுடன், ஐயப்ப சுவாமி திருவீதி உலா மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது. மண்டல பூஜையை முன்னிட்டு, நேற்று நஞ்சுண்ட விநாயகர் கரும்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஸ்ரீ ஐயப்பன் சிறப்பு மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் மண்டல பூஜையில் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.