Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி ... கோவையில் ஏ3 மாநாட்டை துவக்கி வைத்தார் காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கோவையில் ஏ3 மாநாட்டை துவக்கி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீட்டு கிணற்றில் பொங்கிய கங்கை; திருவிசநல்லுார் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் புனித நீராடல்!
எழுத்தின் அளவு:
வீட்டு கிணற்றில் பொங்கிய கங்கை; திருவிசநல்லுார் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் புனித நீராடல்!

பதிவு செய்த நாள்

30 நவ
2024
11:11

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிசநல்லுார் ஸ்ரீ பகவந்நாம போதேந்த்திர சுவாமிகள், ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள், ஸ்ரீதர அய்யாவாள் சுவாமிகள் ஆகியோர் சாஸ்திரங்கள், வேதங்கள் குறித்து விவாதித்த தலம். இத்தலத்தில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீதர அய்யாவாள் மகான் வாழ்ந்த காலத்தில் ஒரு கார்த்திகை அமாவாசை தினத்தில் அவரது தந்தைக்கு திதி கொடுக்க ஏற்பாடு நடந்து வந்த நிலையில்,ஏழை ஒருவர் பசியால் துடித்தது காண பொறுக்காமல்,திதிக்காக ஏற்பாடு செய்த உணவை அய்யவாள் வழங்கினார்.  


திதிக்காக வந்த சாஸ்திரிகள் திதி கொடுக்கும் முன்பே அதற்காக தயாரித்த உணவை அளித்து விட்டதால் தோஷம் ஏற்பட்டுள்ளது. இதனை போக்க வேண்டுமானால் நீ காசியில் போய் நீராடி வந்த பின்னரே திதி கொடுக்க இயலும் என கூறி சென்று விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அய்யாவாள் திதி கொடுக்காமல் இருக்க முடியாதே என வருந்தி உடனடியாக சிவனிடம் கங்காஷ்டகம் எனும் ஸ்தோஸ்திரத்தை வாசிக்க, அவரது வீட்டு கிணற்றில் கங்கை பிரவாகமாக பொங்க தொடங்கியதாக சஸ்திரங்கள் கூறுகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற ஸ்ரீ அய்யாவாளின் பெருமையை உலகுக்கு உணர்த்திய தினமான கார்த்திகை அமாவாசை தினத்தில் ஆண்டு தோறும் அய்யாவாள் வீட்டு கிணற்றில் கங்கை நீர் பிரவாகமாக பொங்கி வருவது வழக்கம். 


அதுபோல இவ்வாண்டும் கார்த்திகை அமாவாசை தினமான இன்று அதிகாலை முதற்கொண்டு தமிழகம் மட்டுமல்லாது கேரளா, ஆந்திரா, கர்நாடக, புதுச்சேரி உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கணக்காண பக்தர்கள்   வரிசையில் வந்து முதலில் காவிரியில் புனித நீராடி பின்னர் அய்யாவாள் மடத்தில் உள்ள விசேஷ கிணற்றில் புனித நீராடினார். இந்நிகழ்ச்சியையொட்டி ஸ்ரீதர அய்யாவாள் சுவாமிகள் விக்ரகம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அதற்கு விசேஷ பூஜைகளும் நடைபெற்றது. நாளை டிச. 01ம் தேதி ஸ்ரீ ஸ்ரீதர அய்யாவாளின் திருவீதியுலாவும் அதனை அடுத்து ஸ்ரீ ஆஞ்சநேய உற்சவமும் நடைபெற்று இவ்வாண்டிற்காண உற்சவம் இனிதே நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா கடந்த, 4ல், ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு  அஷ்ட பைரவ யாகத்துடன் 6 நாட்கள் நடந்த சம்பக ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் நாச்சியார் தாயார் சன்னதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை ... மேலும்
 
temple news
கோவை; ரேஸ்கோர்ஸ் ஸ்ரீ சாரதாம்பாள் கோவிலில் உள்ள, ஸ்ரீ சாரதாம்பாளுக்கு இன்று சிறப்பு மஹா அபிஷேகம் ... மேலும்
 
temple news
வில்லியனுார்; சேதராப்பட்டு பழைய காலனியில் புதியதாக கட்டப்பட்ட நீலாவதி அம்மன் உடன் விநாயகர், முருகன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar