கோவையில் ஏ3 மாநாட்டை துவக்கி வைத்தார் காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30நவ 2024 12:11
கோவை; கொடிசியா அரங்கில் வாய்ஸ் ஆப் கோவை அமைப்பு சார்பில் விழித்திரு, எழுந்திரு, உறுதியாக இரு என்ற தலைப்பிலான ஏ3 மாநாட்டை காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்து சொற்பொழிவாற்றினார்.
சனாதன தர்மம் என்பது வாழ்க்கை முறை; கோவை அமைப்பு சார்பில் துவங்கிய ஏ3 மாநாட்டில் ஸ்வாமினி சத்வித்யானந்த சரஸ்வதி கூறியதாவது; மனிதர்களை படைக்கும்போதே வேதங்கள் படைக்கப்பட்டன; அதனால் தான் நாம் மனிதர்களாக உள்ளோம். வேதங்கள் தான் சனாதன தர்மம்; சனாதன தர்மம் என்பது வாழ்க்கை முறை. ஹிந்துக்கள் அனைவரும் சனாதன தர்மத்தை பின்பற்ற வேண்டும். இவ்வாறு கூறினார்.