தேனி; சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாலை அணிந்து வரும் பக்தர்கள், மாலை அணியாமல் வரும் பக்தர்கள் அனைவரும் முன்பதிவு செய்வது அவசியம்.
முன்பதிவு செய்தவர்களின் டிக்கெட்டுகள் பம்பை கணபதி கோவில் அருகே சோதனை செய்யப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். முன்பதிவு செய்யாமல் வருபவர்களுக்கு ‘ஸ்பாட் புக்கிங்’ வாயிலாக முன்பதிவு செய்து அனுமதிக்கப்படுகின்றனர். ஆன்லைன் வாயிலாக தினமும் 70,000, ஸ்பாட் புக்கிங் வாயிலாக 10,000 பேருக்கு தரிசன அனுமதி வழங்கப்படுகிறது. இந்நிலையில் 2025 ஜன., 8 வரையில் ஆன்லைன் முன்பதிவு முழுவதும் நிறைவடைந்தது. இந்த நாட்களில் முன்பதிவு செய்யாமல் சபரிமலை செல்வோர் ‘ஸ்பாட் புக்கிங்’ செய்து தரிசனம் செய்யலாம்.