Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வடைமாலை ... திருப்புத்தூர் யோக பைரவர் சன்னதியில்  சம்பக சஷ்டி விழா துவக்கம் திருப்புத்தூர் யோக பைரவர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவெண்காடு கோவிலில் துர்கா ஸ்டாலின் பால்குடம் எடுத்து வழிபாடு
எழுத்தின் அளவு:
திருவெண்காடு கோவிலில் துர்கா ஸ்டாலின் பால்குடம் எடுத்து வழிபாடு

பதிவு செய்த நாள்

02 டிச
2024
10:12

மயிலாடுதுறை; திருவெண்காடு கோவிலில் கார்த்திகை 3ம் ஞாயிறு அகோரமூர்த்தி அபிஷேகம் நடந்தது. முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து வழிபாடு நடத்தினார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற இத்தலம் காசிக்கு இணையாக போற்றப்படுகிறது இங்கு மூர்த்தி, அம்பாள், தீர்த்தம், விருட்சம், ஆகமப்படி பூஜை  அனைத்தும் மூன்றாக  அமைந்துள்ளது. இத்தளத்தில் சிவபெருமானின் 5 முகங்களில் ஒன்றான அகோர மூர்த்தி மற்றும் நவகிரகங்களில் புதன் பகவான் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். முன்னொரு காலத்தில்  மருத்துவாசூரன் என்ற அசுரன் ஈசனிடம் பெற்ற சூலாயுதத்தை கொண்டு தேவர்கள், முனிவர்களை இம்சித்தான். போர் புரிய சென்ற நந்தியை மருத்துவாசூரன் 9 இடங்களில் சூலாயுதத்தால் குத்தி காயமடைய செய்ததால் கோபம் கொண்ட சிவபெருமான் தனது 5 முகங்களில் ஒன்றான அகோர மூர்த்தியாக அசுரனை அழிக்க முற்பட்டபோது அதனை கண்டு அஞ்சிய அசுரன் சரணாகதி அடைந்தான். இதனை போற்றும் வகையில் கார்த்திகை மூன்றாம் ஞாயிறு அன்று அகோர மூர்த்திக்கு மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம் இவ்வாண்டு கார்த்திகை மாத மூன்றாம் ஞாயிறான நேற்று மதியம் அகோர மூர்த்தி சுவாமிக்கு மகா அபிஷேக ஆராதனை நடைபெற்றது.  முன்னதாக சந்திர தீர்த்தத்தில் இருந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அகோர மூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர். பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முருகன் தலைமையிலானோர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆனி சஷ்டி திதியும், உத்திர நட்சத்திரமும் இணைந்த இந்த நாள் சிறப்பு வாய்ந்தது. இன்று அனைத்து ... மேலும்
 
temple news
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன தரிசன திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
கோவை; ஆனி மாதம் மூன்றாவது செவ்வாய் கிழமை மற்றும் சஷ்டி விரதத்தை முன்னிட்டு கோவை ... மேலும்
 
temple news
ராஜபாளையம்; ராஜபாளையம் மாயூரநாதர் சுவாமி கோயில் ஆனிப்பெருந் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்பூர்; நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, நேற்று உழவாரப்பணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar