Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news டிஜிட்டல் மயமாகிறது சபரிமலை மற்றும் ... எருமேலி, புல் மேடு பாதைகள் திறப்பு; அரசு பஸ்ஸில் தினமும் 90 ஆயிரம் பேர் பயணம் எருமேலி, புல் மேடு பாதைகள் திறப்பு; ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் வெயில் அடித்ததால் இயல்பு நிலை திரும்பியது எருமேலி
எழுத்தின் அளவு:
சபரிமலையில் வெயில் அடித்ததால் இயல்பு நிலை திரும்பியது எருமேலி

பதிவு செய்த நாள்

04 டிச
2024
10:12

சபரிமலை; வானம் தெளிந்து வெயில் அடித்ததால், சபரிமலையில் நேற்று இயல்பு நிலை திரும்பியது. புல் மேடு மற்றும் எருமேலி பாதையில் பக்தர்கள் இன்று முதல் முழுமையாக அனுமதிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.


நவ., 30 இரவு முதல் நேற்று அதிகாலை வரை தொடர்ச்சியாக மூன்று நாட்கள் சபரிமலையில் கனமழை பெய்தது. வானம் எந்த நேரமும் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவில் பனி சூழ்ந்தது. நேற்று காலை 8:00 மணி-க்கு பின் வானம் தெளிந்தது. வெயில் அடிக்க துவங்கியது. அவ்வப்போது வானில் மேகமூட்டம் காணப்பட்டாலும் மாலை வரை வெயில் அடித்ததால் பக்தர்கள் மற்றும் தேவசம்போர்டு அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர். பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் நடத்தி திரும்பினர். தொடர் மழையால் குமுளி,- சத்திரம்,- புல் மேடு, எருமேலி,- முக்குழி, கரிமலை பாதைகளில் பக்தர்கள் செல்ல இடுக்கி மாவட்ட கலெக்டர் விக்னேஸ்வரி தற்காலிக தடை விதித்திருந்தார். நேற்று காலை முதல் மழை பெய்யாததால் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாலை வரை அனுமதி வழங்கப்படவில்லை.


இதுகுறித்து, இடுக்கி மாவட்ட கலெக்டர் அலுவலகம் தரப்பில், ‘நாளைய காலநிலையை பொருத்து முடிவெடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது. இன்றும் மழை இல்லாமல் வெயில் அடிக்கும் பட்சத்தில், பக்தர்கள் இப்பாதைகளில் அனுமதிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று முன்தினமும், புல் மேடு பாதையில் பயணம் செய்வதற்காக சத்திரம் வந்த நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கேரள அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில் பம்பைக்கு அழைத்து வரப்பட்டனர். நடப்பு சீசனில் இதுபோன்று திடீர் காலநிலை மாற்றம் ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்படும் பட்சத்தில் அதை எதிர்கொள்ள தேசிய பேரிடர் நிவாரண படையினர் உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மழை குறித்த முன்னறிவிப்பு வந்ததும் பம்பையில் செய்ய வேண்டிய அனைத்து ஏற்பாடுகளும் செய்து போலீஸ், தீயணைப்புத் துறையினர் மற்றும் பேரிடர் நிவாரண படையினர் தயாராக இருக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை; சபரிமலையில் நாளை மகரஜோதி தரிசனம் நடக்கிறது. காலையில் மகர சங்கரம பூஜையும், மாலையில் ... மேலும்
 
temple news
சபரிமலை; ஆகாயத்தில் கருடன் வட்டமிட்டு பறக்க, பக்தர்களின் சரண கோஷம் விண்ணைத் தொட பந்தளத்தில் இருந்து ... மேலும்
 
temple news
சபரிமலை:: சபரிமலையில் மகரஜோதிக்கு முன்னோடியாக எருமேலியில் இன்று பேட்டை துள்ளல் நடக்கிறது. நாளை ... மேலும்
 
temple news
சபரிமலை; ‘சபரிமலையில் ஜன.14 ஜன. 18 வரை திருவாபரணம் அணிந்த ஐயப்பனை பக்தர்கள் தரிசிக்க முடியும்’’ என்று ... மேலும்
 
temple news
மானாமதுரை; சபரிமலை ஐயப்பன் சுவாமி, மேல்சாந்தியை தத்ரூபமாக மானாமதுரையைச் சேர்ந்த ஓவியர் நேரடியாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar