பதிவு செய்த நாள்
04
டிச
2024
12:12
கூடலூர்; மசினகுடி பொக்காபுரம் மாரியம்மன் கோவில், கும்பாபிஷேகம் நாளை சிறப்பாக நடைபெறுகிறது.
நீலகிரி மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற முதுமலை மசினகுடி பொக்காபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் திருவிழா இன்று, காலை 9:05 மணிக்கு மங்கள இசையுடன் துவங்குகிறது. தொடர்ந்து, திருவிளக்கு ஏற்றுதல், மூத்த பிள்ளையார் வழிபாடு, தூய நீராக்கல் ஜவகைத் தூய்மை இறை ஆனை பெறுதல், நிலத்தேவர் வழிபாடு, எண் திசை வழிபாடு, முளைப்பாலிகைவிடுதல், கணபதி வேள்வி, நவக்கோள் வேள்வி, நிறையாகுதி பேரொளி வழிபாடு, அன்னம் பாலிப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. மாலை 4:00 மணிக்கு மூத்த பிள்ளையார் வழிபாடு, தூய நீராக்கல் கும்ப திருமேனி வழிபாடு, முதற்கால யாக வேள்வி, நிறையாகுதி, பேரொளி வழிபாடு, அன்னம் பாலிப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. நாளை காலை 7:35 மணிக்கு மங்கள இசையுடன் நிகழ்ச்சிகள் துவங்குகிறது. தொடர்ந்து மூத்த பிள்ளையார் வழிபாடு, இரண்டாம் கால வேள்வி நடைபெறுகிறது. சாலை 9:05 ஜீவ கலைகள் நாடியின் வழியாக மூலதிருமேனியை அடைதல் நிகழ்ச்சியும், 9:20 மணிக்கு நிறையாகுதி பேரொளி வழிபாடு நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை 9:40 முதல் 10:00 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து, கருவறை மாரியம்மனுக்கு பெருந்திருமஞ்சனம், பதின் மங்களக்காட்சி, சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை மற்றும் கோவில் கமிட்டி, கிராம மக்கள் செய்துள்ளனர்.