நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் முன்பு விசுவஹிந்து பரிஷத் சார்பில் விளக்கேற்றும் நிகழ்ச்சி நிகழ்ச்சி நடந்தது.இதற்கு விசுவ ஹிந்து பரிஷத் நகர பொறுப்பாளர் தியாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர் ராஜேந்திரபிரசாத், நகர துணை அமைப்பாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தொடர்ந்து மாரியம்மன் கோவில் முன்பு 108 விளக்குகள் ஏற்றப்பட்டு திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற கோரிய நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு செயல்படுத்த வலியுறுத்தி வழிபாடு செய்யப்பட்டது. இதில் விசுவ ஹிந்து பரிஷத் ஒன்றிய செயலாளர் தனிவீரன், துணை தலைவர் மதிமாறன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.