திருஞானசம்பந்தர் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்தபோது, பலர் சிவபக்தர்களாக மாறினர். இதை அறிந்த சமணர்கள், கூன்பாண்டிய மன்னரிடம், அந்தச்சிறுவனைக் கண்டதால் தங்களுக்கு கண்டுமுட்டு ஏற்பட்டதாகச் சொன்னார்கள். கண்ணால் கண்டதால் ஏற்படும் தீமையையே கண்டுமுட்டு என்பர். இதுகேட்ட மன்னன் கேட்டுமுட்டு ஏற்பட்டதாக வருந்தினான். தீயதைக் காதால் கேட்பதை கேட்டுமுட்டு என்பர். பின்னர் அந்த மன்னனே, ஞானசம்பந்தரின் செய்கைகளால் மனம் திருந்தி சிவபக்தனானான். நாயன்மார் வரிசையிலும் இடம் பெற்றான்.