வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலில் கார்த்திகை சோமவார சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09டிச 2024 11:12
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே, சக்தி விநாயகர் கோவிலில், வெள்ளிங்கிரி ஆண்டவர் சன்னதி உள்ளது. கார்த்திகை மாத நான்காம் சோமவாரத்தை முன்னிட்டு வெள்ளிங்கிரி ஆண்டவருக்கு இன்று சிறப்பு பூஜை நடந்தது. பால், தயிர், பன்னீர், சந்தனம், திருநீர், தேன், கரும்புச்சாறு, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களால், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.