கோவை; ராம் நகர் கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் கார்த்திகை மாதம் நான்காவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திங்கட்கிழமை சிவனுக்குரிய சோமவார விரதம் மேற்கொள்வர். இதனை கார்த்திகை மாதத்தில் அனுஷ்டிப்பது சிறப்பு. சங்காபிஷேகம் தரிசிப்பதால் சுபிட்சம் உண்டாகும். கார்த்திகை சோம வாரமான இன்று கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் இருக்கும் ஆபத்சகாய வில்வ லிங்கேஸ்வரருக்கு 1008 சங்காபிஷேகம் பூஜை நடந்தது. அதை தொடர்ந்து பல்வேறு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ தரினம் செய்தனர்.