வடமதுரை; வடமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடந்தது. புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரபட்ட தீர்த்தங்கள், பன்னீர், சந்தனம், பால் உள்பட 11 வித அபிஷேக பொருட்களை கொண்டு சிவனுக்கு அபிஷேகம் நடந்தது.108 சங்குகள், தாமரைமலர்கள், வாழை, எலுமிச்சை பழங்கள் வைத்து அலங்கரிப்பட்டு பூஜைகள் நடந்தன. சவுந்தரராஜப் பெருமாள் கோயில் அர்ச்சகர் தேவராஜ் தலைமையிலான குழுவினர் சங்காபிஷேகத்தை நடத்தினர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.