திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், 6ம் நாள் தீப திருவிழாவில், வெள்ளி யானை வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்து அருள்பாலித்தார்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று நடந்த, 6ம் நாள் தீப திருவிழாவில், அதிகாலை, 3:00 மணிக்கு, கோவில்நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, காலை, 10:00 மணிக்கு, சிவபெருமானுக்கு தொண்டு செய்து வாழ்ந்த, 63 நாயன்மார்களை போற்றும் வகையில், நாயன்மார்கள் ஊர்வலம் நடந்தது. இதில் சமயக்குரவர்கள் சம்பந்தர், சுந்தரர், அப்பர், மாணிக்கவாசகர் உள்ளிட்ட, 63 நாயன்மார்கள் மாடவீதியில் வலம் வந்தனர். தொடர்ந்து யானை வாகனத்தில் விநாயகர், வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகரர் சுவாமி வீதி உலா நடந்தது. இதை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.