ஆழ்வார்பேட்டை; பஞ்சாங்கத்தின்படி, கீதா ஜெயந்தி விழா இன்று சென்னை, புறநகரின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டது. வேதப் பள்ளியான அத்வைத பாரதி சார்பில், ஆண்டுதோறும் கீதா ஜெயந்தி விழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு கீதா ஜெயந்தி விழா, ஆழ்வார்பேட்டையில் உள்ள ஆஸ்திக சமாஜத்தில் நடந்தது. விழா துவக்கத்தில் சங்கல்பம் செய்யப்பட்டது. இதையடுத்து, பிரம்ம யோகானந்தா குருஜியின் சிஷ்யர்களும், வேதப் பள்ளி ஆச்சார்யர்களான அத்வைத பாரதி-சூர்யபிரியா, பிரம்ம வித்யாமந்தீர்-ரங்கராஜன், பிரக்யான பிரகாஷி கா-வாசுதேவன், சாஸ்திரிவாஹினி- வனிதா, ஆர்ஷபோதினி-லாவன்யா ஆகியோர் தலைமையில், ஏராளமான பக்தர்கள், பகவத் கீதையின் 18 ஆத்தியாயங்களை தொடர்ந்து மூன்று மணிநேரம் சம்பூரண பாராயணம் செய்தனர். பின், மகா பிரசாதனம் வழங்கப்பட்டது.