அழகர்கோவில் மற்றும் பெருமாள் கோயில்களில் நடை திறப்பில் மாற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14டிச 2024 09:12
அழகர்கோவில்; அழகர்கோவில் கள்ளழகர் கோயில், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலில் மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு டிச. 16 முதல் அடுத்தாண்டு ஜன. 13 வரை நடை திறப்பு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கள்ளழகர் கோயிலில் அதிகாலை 4:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை, மதியம் 3:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை நடை திறக்கப்படும். பிரசன்ன வெங்கடாஜலபதி, வீரராகவ பெருமாள் கோயில்களில் அதிகாலை 5:00 மணி முதல் காலை 11:30 மணி வரை, மாலை 5:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை நடை திறக்கப்படும் என இணைகமிஷனர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.