ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் சிவனுக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14டிச 2024 10:12
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் சிவலிங்கம், நந்திக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாரதனை நடந்தது.
விருப்பாச்சி தலையயூற்று ஸ்ரீநல்காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நந்தி, சிவலிங்கத்திற்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடந்தது. நவாமரத்துப்பட்டிபுதூர் ஸ்படிகலிங்கேஸ்வரர் கோயிலில் சுவாமிக்கு 16 வகையான அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வரர் கோயிலில் அபிஷேகம் ஆராதனை நடந்தது.