பதிவு செய்த நாள்
17
டிச
2024
10:12
தஞ்சை ; மார்கழி மாதத்தை முன்னிட்டு உலக மக்கள் நன்மைக்காக தஞ்சை புன்னைநல்லூர் அருள்மிகு மாரியம்மன் கோவிலில் ஆயிரம் பெண்கள் அகல்விளக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.
தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் அருள்மிகு மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் மூலவர் சன்னதியில் அம்மன் சிலையாக பிரதிஷ்டை செய்யாமல் புற்றாக உருவாகி அம்மன் காட்சி அளித்து வருகிறார்,
இதனால் மூலவர் சன்னதிக்கு எவ்வித அபிஷேகமும் செய்வதில்லை, தைலக்காப்பு அபிஷேகம் மட்டுமே செய்யப்படும், இத்தகைய சிறப்புமிக்க இக்கோவிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு உலக மக்கள் நலன் வேண்டியும், இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை காக்க வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் ஆயிரம் பெண்கள் அகல்விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டனர்.