கோயில்களில் மார்கழி உற்சவம் கோலாகலம்; டிச.23 அன்று காலபைரவ அஷ்டமி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19டிச 2024 05:12
பரமக்குடி; பரமக்குடி கோயில்களில் மார்கழி உற்சவம் கோலாகலமாக நடந்து வரும் நிலையில், டிச.23 காலபைரவ அஷ்டமி விழா நடக்கிறது.
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் காலை 5:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை பாடல்களை கோஷ்டியினர் பாடி வருகின்றனர். தினமும் காலை 5:45 மணிக்கு மூலவர் பரமஸ்வாமி, உற்சவர் சுந்தரராஜ பெருமாளுக்கு மகா தீபாராதனை நடந்து, பிரசாதங்கள் வழங்கப்படுகிறது. அதேபோல் ஈஸ்வரன் கோயிலில் காலை 4:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, திருவெம்பாவை பாடல்கள் பாடப்படுகிறது. இங்கு விசாலாட்சி அம்பிகா, சந்திர சேகர சுவாமிக்கு டிச.23 அதிகாலை 4:00 மணிக்கு காள பைரவ அஷ்டமி மகா அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து அனைத்து ஜீவராசிகளுக்கும் படி அளந்த லீலையில், பஞ்சமூர்த்திகள் புஷ்ப சப்பரத்தில் வீதி வலம் வர உள்ளனர். இதே போல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலிலும் அபிஷேகம் நிறைவடைந்து சுவாமி வீதி வலம் வருவார்.