பதிவு செய்த நாள்
20
டிச
2024
10:12
சென்னை; திருமலை, திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில், தினசரி அதிகாலை முதல் நள்ளிரவு வரை, பல சேவைகள் நடக்கின்றன. அவற்றில் வரும் மார்ச் மாதம் நடக்கவுள்ள சேவைகளுக்கான முன்பதிவு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஸ்ரீவாரி சேவா டிக்கெட்டிற்கான எலக்ட்ரானிக் குலுக்கலுக்கு, இன்று காலை, 10:00 மணிவரை முன்பதிவு செய்யலாம். ஸ்ரீவாரி ஆர்ஜித சேவைக்கான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கு, நாளை காலை, 10:00 மணிக்கு முன்பதிவு துவங்குகிறது. மார்ச் 9 முதல், 13ம் தேதிவரை நடக்கவுள்ள தெப்ப உற்சவ சேவைக்கான டிக்கெட் முன்பதிவு நாளை காலை, 10:00 மணிக்கு துவங்குகிறது. ஆன்லைன் சேவைகளுக்கான முன்பதிவு மாலை, 3:00 மணிக்கு துவங்குகிறது. அங்கப்பிரதக்ஷனம் செய்வதற்கான முன்பதிவிற்கு வரும், 23ம் தேதி காலை 10:00 மணிக்கும், ஸ்ரீவாணி டிரஸ்ட் சேவை மற்றும் தங்கும் விதிகளுக்கான முன்பதிவு காலை 11:00 மணிக்கும் நடக்கிறது. மூத்த குடிமக்கள், மாற்று திறனாளிகள் தரிசனத்திற்கான முன்பதிவு, மாலை 3:00 மணிக்கும் துவங்குகிறது. மார்ச் மாத சிறப்பு தரிசனம், 300 ரூபாய்க்கான முன்பதிவு வரும், 24ம் தேதி காலை 10:00 மணிக்கு துவங்குகிறது. திருமலை மற்றும் திருப்பதியில் தங்கு விடுதிகளுக்கான முன்பதிவு, மாலை, 3:00 மணிக்கு துவங்குகிறது.