வேப்பம்பட்டு: பெருமாள்பட்டு காளஹஸ்தீஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப விழாவை ஒட்டி, 1,008 அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன.வேப்பம்பட்டை அடுத்த, பெருமாள்பட்டில், 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஞானபிரசூனாம்பிகை உடனுறை காளஹஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. பல்லவ மன்னர் ராஜசிம்மனால் இக்கோவில் கட்டப்பட்டது. இக்கோவிலில், கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம், 1,008 அகல் விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.