பதிவு செய்த நாள்
29
நவ
2012
11:11
கோபிசெட்டிபாளையம்: கோபி பச்சைமலை, பவளமலை முருகன் கோவில்களில் டிசம்பர், 2ம் தேதி ராகு, கேது பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பரிகார பூஜை நடக்கிறது. டிசம்பர், 2ம் தேதி ராகுபகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கும், கேது பகவான் ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கும் பிரவேசிப்பதால் மிகவும் பிரசித்தி பெற்ற கோபி பச்சைமலை சுப்பிரமணிய ஸ்வாமி கோவில் மற்றும் பவள மலை முத்து குமாரசாமி கோவில்களில் ராகு கேது பரிகார சிறப்பு பூஜை நடக்கிறது. 2ம் தேதி காலை, 8.30 மணிக்கு ராகு, கேது பெயர்ச்சி கலச பூஜை, பகல், 11.30 மணிக்கு நவகிரக ஆவாஹனம், ராகு, கேது பரிகார சிறப்பு ஹோமம், நவகிரக மூர்த்திகளுக்கு அபிஷேகம், கலச அபிஷேகம், பகல், 12 மணிக்கு ராகு கேது சிறப்பு பரிகார அர்ச்சனை, தீபாராதனையும், தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் நடக்கிறது. மேஷம், ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும் என ஜோதிட ரீதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராகு, கேது பரிகார பூஜை செய்ய விரும்புவோர் தங்கள் பெயரில் கோவில் நிர்வாகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.