சீர்காழி ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி சிறப்பு யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29டிச 2024 06:12
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காரைமேடு கிராமத்தில் ஓளிலாயம் 18 சித்தர்கள் பீடம் அமைந்துள்ளது. இங்கு சிறப்பு யாகம் செய்து சித்தர்களை வழிபட்டால் சகல நன்மைகளும் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதனால் இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிநாட்டினரும் வந்து வழிபாடு நடத்துவது வழக்கம். இந்நிலையில் இன்று ஒளிலாயம் சித்தர்கள் பீடத்தில் 2025 ஆம் ஆண்டு பிறப்பை முன்னிட்டு உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் சிறப்பு யாகம் மற்றும் திருவிளக்கு பூஜை நடந்தது. இதனை முன்னிட்டு 60 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 108 மூலிகைகளை கொண்டு 60 சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், ருத்ர ஹோமம் உள்ளிட்ட பரிவார பூஜைகளுடன் மகா யாகம் நடந்தது. தொடர்ந்து ஒளிலாயத்தில் அருள்பாளிக்கும் சிவலிங்கத்துக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனையும் செய்யபட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.