பதிவு செய்த நாள்
02
ஜன
2025
03:01
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை, நெய்வனை கிராமம், பிரஹன்நாயகி உடனுறை சொர்ணகடேஸ்வரர் கோவில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வரும் பிப்.,10ம் தேதி சிறப்பாக நடைபெற உள்ளது.
திருநெல்வெண்ணை என்கின்ற நெய்வனை கிராமத்தில் திருஞானசம்மந்தர் அவர்களால் பாடல் பெற்ற ஸ்தலமாகும். நமது ஊர் சங்கடத்தை நீக்கி பொற்காலத்தை அருளிய இறைவனாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீ பிரஹன்நாயகி உடனுறை ஸ்ரீ சொர்ணகடேஸ்வரர் பெருமானுக்கும் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கும் ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வரும் தை மாதம் 28ம் நாள் பிப் 10ம் தேதி திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு மேல் 10.30க்குள் கோலாகலமாக நடைபெற உள்ளது.தொடர்ந்த அன்று மாலை சுவாமி அம்பாள் திருக்கல்யாண பெருவிழா நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு, தை 25 ம் நாள் 07.02.2025 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, மகா சங்காலபம், தேவதா அனுஞை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடைபெறுகிறது.
விழாவில் 07.02.2025 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி,க்ராமசாந்தி, ம்ருத்சங்கிரஹணம் (புனித மண் எடுத்தல்)
08.02.2025 சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு சாந்தி ஹோமம், திசா ஹோமம், மூர்த்தி ஹோமம், சம்ஹிதா ஹோமம், தீர்த்த சங்க்ரஹணம், அக்னி சம்க்ரஹணம். மாலை 5.30 மணிக்கு அங்குரார்பணம், ரக்ஷா பந்தனம், கும்ப அலங்காரம், கலாகர்ஷனம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாகசாலை பூஜை ஆரம்பம். இரவு 8.00 மணிக்கு விசேஷ திரவிய ஹோமம், மஹா பூர்ணாஹுதி, தீபாராதனை பிரசாதம் வழங்குதல்
09.02.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு விசேஷ சந்தி, இரண்டாம் கால யாக பூஜை ஆரம்பம், காலை 11.00 மணிக்கு இரண்டாம் கால விசேஷ திரவிய ஹோமம், யந்திர பிரதிஷ்டை விமான கலச பிரதிஷ்டை, அஷ்டபந்தனம் சாத்துதல், ஷண்ணவதி ஹோமம், மஹா பூர்ணாஹுதி.விசேஷ உபசாரங்கள், மஹா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல். மாலை 5.00 மணிக்கு விசேஷ சந்தி, மூன்றாம் கால யாக பூஜை ஆரம்பம். மாலை 6.00 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சி மற்றும் கயிலாய வாத்தியம் இசை நிகழ்ச்சி நடைபெறும். 8.00 மணிக்கு மூன்றாம் கால திரவ்ய ஹோமம், மகாபூர்ணாஹுதி, விசேஷ உபசாரங்கள், மஹாதீப ஆராதனை, பிரசாதம் வழங்குதல் நடக்கிறது.
10.02.2025 திங்கட்கிழமை காலை 5.00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை ஆரம்பம், தத்துவ அர்ச்சனை, ஸ்பர்சாஹுதி, நான்காம் கால விசேஷ திரவிய ஹோமம் நடைபெற்று, காலை 9.00 மணிக்கு மஹா பூர்ணாஹுதி, யாத்ரா தானம், கலசங்கள் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து, காலை 10.30 மணிக்குள் அனைத்து விமான கோபுரங்கள் மற்றும் மூலவர் மகா கும்பாபிஷேகம் நடைபெறும். அன்று மாலை 6.00 மணியளவில் அருள்மிகு ஸ்ரீ பிரஹன்நாயகி அம்பிகை உடனுறை ஸ்ரீ சொர்ணகடேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் மற்றும் திருவீதிஉலா காட்சியும் நடைபெறுகிறது.