Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் மண்டல காலத்தில் 32.50 ... சபரிமலையில் தொடர்ந்து அலை மோதும் பக்தர்கள்; தரிசனத்திற்கு பல மணி நேரம் காத்திருப்பு சபரிமலையில் தொடர்ந்து அலை மோதும் ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
மகரஜோதிக்கு வனத்துறை சார்பில் ஏற்பாடுகள் துரிதம் : அமைச்சர் சசீந்தரன்
எழுத்தின் அளவு:
மகரஜோதிக்கு வனத்துறை சார்பில் ஏற்பாடுகள் துரிதம் : அமைச்சர் சசீந்தரன்

பதிவு செய்த நாள்

04 ஜன
2025
10:01

சபரிமலை; மகரஜோதி தரிசனத்திற்காக சபரிமலையில் வனத்துறை சார்பில் எல்லா முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக கேரள வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் கூறினார்.


இது தொடர்பாக பம்பையில் நடைபெற்ற அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் அவர் கூறியதாவது: கேரள அரசின் அனைத்து துறைகளின் ஒத்துழைப்பால் சபரிமலையில் இந்த ஆண்டு மண்டலகாலம் பெரிய புகார்களுக்கு இடம் அளிக்காமல் நடந்து முடிந்தது. பாரம்பரிய பாதைகளான பெருவழி பாதையில் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 534 பேரும், சத்திரம்,- புல்மேடு வழியாக 86 ஆயிரத்து 980 பேரும் சபரிமலை வந்து தரிசனம் செய்துள்ளனர். அட்டதோடு முதல் நீலிமலை வரை உள்ள திருவாபரண பாதையின் சீரமைப்பு பணிகள் முடிவடைந்துள்ளது. பம்பை - நுணங்காறுக்கு இடையே தற்காலிக பாலம் அமைக்கும் பணி ஜன., 12- க்கு முன்னர் முடிவடையும். பெருவழிப் பாதையில் அழுதை கடவு, கல்லிடும் குன்று, வள்ளித்தோடு, வெள்ளாறம்செட்டை, புதுச்சேரி, கரிமலை, வலியானவட்டம் சிறியான வட்டம் ஆகிய எட்டு பக்தர் தங்குமிடங்களில் சுற்றுச்சூழல் அபிவிருத்தி கமிட்டிகள் செயல்படுகிறது. யானை உள்ளிட்ட வனவிலங்குகளை கண்காணிப்பதற்காக அழுதை – பம்பை, பம்பை – சன்னிதானம், சத்திரம் –- சன்னிதானம் பாதைகளில் வனத்துறையின் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதுபோல இந்த பாதைகளில் சிசிடிவி கண்காணிப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பம்பை மற்றும் சன்னிதானத்தில் இருந்து 100 காட்டுப்பன்றிகள் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. சத்திரம், உப்பு பாறை பாதையில் நேரடி கண்காணிப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பம்பை, சன்னிதானம், புல் மேடு ஆகிய இடங்களில் யானை தடுப்பு படையை சேர்ந்த ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புல் மேட்டில் போலீசின் தற்காலிக வயர்லெஸ் மையம் அமைக்க வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. காட்டுப்பாதைகளில் பக்தர்களுக்கு உதவுவதற்காக வனத்துறை சார்பில் உதவி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. மகரஜோதி நாளில் புல் மேட்டில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். புல் மேட்டில் மகரஜோதி தெரியும் இடங்களில் இடுக்கி மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை; தொடர்ந்து அலை மோதும் பக்தர்களால் சபரிமலை திணறி வருகிறது. பல மணி நேரம் காத்திருந்து படியேறி ... மேலும்
 
temple news
சபரிமலை; புள்ளு என்ற பறவையிலிருந்து குழந்தைகளுக்கு கிடைக்கும் தோஷங்களை தீர்க்க சபரிமலையில் ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் இந்தாண்டு மகர ஜோதியும் மகர சங்கரம பூஜையும் வரும் 14-ம் தேதி நடக்கிறது. சபரிமலையில் ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மண்டல காலம், டிச., 26ல் நிறைவு பெற்று, அன்றிரவு நடை அடைக்கப்பட்ட பின்னர் டிச., 30 மாலை ... மேலும்
 
temple news
சபரிமலை; மகர விளக்கு சீசனில் பக்தர்கள் கூட்டம் காரணமாக சபரிமலை திணறுகிறது. 8 மணி நேரம் காத்திருந்து 18 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar