Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ... புஷ்ப அலங்காரத்தில் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் அருள்பாலிப்பு புஷ்ப அலங்காரத்தில் அன்னூர் கரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெல்லையப்பர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
நெல்லையப்பர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

04 ஜன
2025
11:01

திருநெல்வேலி; நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் திருவாதிரை திருவிழா ( ஆருத்ரா தரிசனம் ) கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது. திரளான பக்தா்கள் தாிசனம் செய்தனர்.


சிவபெருமான் திரு நடனம் ஆடிய பஞ்சசபைகளில் ஒன்றான தாமிரசபை   சுவாமி நெல்லையப்பர் திருக்கோவிலில் அமைந்துள்ளது. திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற  ஸ்தலமாகிய இத் திருக்கோயிலில் இந்த ஆண்டுக்கான மார்கழி திருவாதிரை திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது . கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை சுவாமி நெல்லையப்பர் கோவில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை. கோ பூஜை. கஜ பூஜை ஆகியவை நடைபெற்றது. தொடா்ந்து  கொடிப்பட்டம் வீதிஉலா வந்ததும் கொடிக்கு பூஜைகள் நடைபெற்று சுவாமி சன்னதி முன்புள்ள தங்க கொடிமரத்தின்முன் வேத மந்திரங்கள் கூற ஓதுவாமூர்த்திகள் திருமுறை பாட நாதஸ்வர இன்னிசையுடன் கொடியேற்றம் நடைபெற்றது . அதனைத் தொடர்ந்து கொடிமரத்திற்கு பால் மஞ்சள்  உள்ளிட்ட 11 வகை பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் பின்னர் மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது அதனை தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது. 10 தினங்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் அதிகாலையில்  பெரிய சபாபதி சன்னதி முன் மாணிக்கவாசகரை எழுந்தருளச் செய்து  திருவெம்பாவை பாடல்கள் பாடப்பெற்று  நடன தீபாராதனை நடைபெறும். திருவிழாவில் நான்காம் திருநாள் அன்று மாலை வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாள் வீதி புறப்பாடும் அதனைத் தொடர்ந்து கார்த்திகை திருவனந்தல் பூஜை நிறைவாக இரவு பூம்பல்லக்கு புறப்பாடும் நடைபெறும், திருவிழாவின் முக்கிய நிகழ்வான பத்தாம் திருநாள் வருகின்ற 13 ம் தேதி  அன்று அதிகாலை  பஞ்சசபையில் ஒன்றான தாமிரசபையில் வைத்து  பசு தீபாராதனையும், அதைத் தொடர்ந்து  திருவெம்பாவை பாடல்கள் பாடப்பெற்று  நடன தீபாராதனையும்  தாமிரசபையில் நடராஜர் திருநடனமும் நடைபெறும். கொடியேற்றத் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ பெருவிழா, கடந்த பிப்., 21ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar