Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் தொடர்ந்து அலை மோதும் ... சபரிமலையில் 14ம் தேதி மகர சங்கரம பூஜை சபரிமலையில் 14ம் தேதி மகர சங்கரம பூஜை
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் குழந்தைகளின் தோஷம் தீர்க்கும் புள்ளுவன் பாட்டு
எழுத்தின் அளவு:
சபரிமலையில் குழந்தைகளின் தோஷம் தீர்க்கும் புள்ளுவன் பாட்டு

பதிவு செய்த நாள்

06 ஜன
2025
10:01

சபரிமலை; புள்ளு என்ற பறவையிலிருந்து குழந்தைகளுக்கு கிடைக்கும் தோஷங்களை தீர்க்க சபரிமலையில் புள்ளுவன் பாட்டு நடைபெறுகிறது.


சபரிமலை மாளிகைபுறத்து அம்மன் கோயிலின் வலது பக்கம் நாகர் சன்னதி அருகே சிறிய வீணை மீட்டி பாடல்கள் பாடி பக்தர்களுக்கு வழிபாடு நடைபெறும். இதை புள்ளுவன் பாட்டு என்று அழைக்கின்றனர். இதற்கு பல்வேறு ஐதீகங்கள் கூறப்படுகிறது. ஐயப்பனுக்கு தோஷங்கள் மாறுவதற்காக பந்தளம் மன்னர் புள்ளுவன் பாட்டு சமர்ப்பிப்பதாக ஒரு ஐதீகம் உள்ளது. பக்தர்களின் நாக தோஷம், நாக்கு தோஷம், கண் தோஷம், பாத தோஷம் போன்றவற்றை தீர்ப்பதற்காக இந்த வழிபாடு நடைபெறுவதாக மற்றொரு ஐதீகம் கூறுகிறது. குழந்தை பேறு கிடைப்பதற்கும், வீடுகளில் ஐஸ்வரியம் பெருகுவதற்கும் இது பாடப்படுவதாகவும் கூறப்படுகிறது. புள்ளு என்ற பறவையிலிருந்து பச்சிளம் குழந்தைகளுக்கு தோஷம் ஏற்படுவதாகவும், புள்ளுவர் அதை வீணை மீட்டி பாடினால் அந்த தோஷம் விலகும் என்றும் 2011 முதல் சபரிமலையில் புள்ளுவன் பாட்டு பாடும் பெரும்பாவூரை சேர்ந்த சுரேஷ் கூறினார்.இவர்கள் மீட்டும் வீணை பிரம்மா, விஷ்ணு, சிவனிடமிருந்து கிடைத்ததாக ஐதீகம் கூறுகிறது. பலா மற்றும் ஆஞ்ஞிலி ஆகிய இரண்டு மரங்களில் மட்டுமே இந்த வீணை செய்யப்படுகிறது. ஆலப்புழா திருச்சூர் எர்ணாகுளம் மாவட்டங்களில் புள்ளுவன் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இந்த வழிபாடை சபரிமலையில் நடத்துகின்றனர். பக்தர்கள் கொடுக்கும் காணிக்கை இவர்களது வருமானம் ஆகும்.


சத்திரம் - புல் மேடு பாதைகளில் வரும் பக்தர்களுக்கு சன்னிதானம் பெரிய நடை பந்தலில் உள்ள மேடையை ஒட்டி தனி கியூ அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வழக்கமான கியூவில் இருந்து வெளியேறி 18 படிகளுக்கு முன் நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக ஆங்காங்கே போலீசார் நிறுத்தப்பட்டு பக்தர்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு அனுப்பப்படுகின்றனர். இதனால் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர். சபரிமலையில் தற்போது பகலில் நல்ல வெயிலும் இரவில் கடுமையான குளிரும் என காலநிலை நிலவுகிறது. மகரஜோதிக்குஇன்னும் எட்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளில் அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். 13, 14 தேதிகளில் பக்தர்களின் ஆன்லைன் முன்பதிவு 50 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. எனினும் அதற்கு முன்பாக வரும் பக்தர்கள் ஜோதி தரிசனத்திற்காக சன்னிதானத்தில் தங்குவார்கள் என்பதால் கவனமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜோதி தெரியும் பம்பை ஹில்டாப், அட்டத்தோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு முடிந்த அளவு பக்தர்களை அனுப்ப போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக தினமும் உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் சன்னிதானத்தில் நடைபெற்று வருகிறது.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை; சபரிமலையில் பக்தர்கள் வெடி வழிபாடு நடத்த நான்கு கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. சபரிமலை வரும் ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மகரஜோதி நாளில் நெரிசலை தவிர்க்க ஸ்பாட் புக்கிங்கை முழுமையாக நிறுத்த ஆலோசனை ... மேலும்
 
temple news
சபரிமலை; தொடர்ந்து அலை மோதும் பக்தர்களால் சபரிமலை திணறி வருகிறது. பல மணி நேரம் காத்திருந்து படியேறி ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் இந்தாண்டு மகர ஜோதியும் மகர சங்கரம பூஜையும் வரும் 14-ம் தேதி நடக்கிறது. சபரிமலையில் ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மண்டல காலம், டிச., 26ல் நிறைவு பெற்று, அன்றிரவு நடை அடைக்கப்பட்ட பின்னர் டிச., 30 மாலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar