ஸ்ரீரங்கம் பகல் பத்து எட்டாம் நாள்: முத்து சாயக்கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் காட்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜன 2025 10:01
திருச்சி: 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் எட்டாம் திருநாளான இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் நம்பெருமாள் முத்து சாயக்கொண்டை, வைரஅபயஹஸ்தம், திருமார்பில் பங்குனி உத்திரப் பதக்கம், மகரகர்ண பதக்கம், மகரகண்டிகை அடுக்கு பதக்கம், முத்துச்சரம், முதுகில் முத்து அங்கி உள்ளிட்ட பல்வேறு திருவாபரணங்களை சூடியவாறு மூலஸ்தானத்தில் இருந்து தங்க பல்லக்கில் எழுந்தருளி, ஆழ்வார்கள் புடைசூழ உள் பிரகாரத்தில் வலம்வந்து அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.