பதிவு செய்த நாள்
08
ஜன
2025
11:01
மயிலம்; மயிலம் அடுத்த தென்கொளப்பாக்கம் கிராமத்தில் செங்கழுநீர் அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து மண்டல பூஜை நடந்து வருகிறது. மயிலம் அருகே உள்ள தென்கொளப்பாக்கம் கிராமத்தில் உள்ள செங்கழுநீர் அம்மன் கோவில் திருப்பணிகள், மகா கும்பாபிஷேம் கடந்தடிசம்பர் 5ம் தேதி நடந்தது. இதனை தொடர்ந்து மண்டல பூஜைகள்தினசரி நடந்து வருகிறது. இதை முன்னிட்டு அம்மனுக்கு பால், சந்தனம், தேன், இளநீர் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடந்தது. 32ம் நாள் மண்டல பூஜை விழாவில் செங்கழுநீர் அம்மன்சிறப்பு அலங்காரத்தில்பக்தர்களுக்கு காட்சி யளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
அனுமதி உள்ளது; பக்தர்களின் குற்றச்சாட்டு குறித்து, கோவில் செயல் அலுவலர் சரண்யா கூறியதாவது: ஆகாசராயர் சன்னதி முற்றிலும் சைவ தெய்வ வழிபாட்டுக்குரியது. இதனருகில் உள்ள அன்னதான கூட மண்டபத்தில் ஆடு, கோழி பலி கொடுத்து வழிபட்ட பின், ஆகாசராயர் கோவிலுக்கு வருவதை தடுப்பதற்காக மதிற்சுவர் கட்டப்பட்டுள்ளது. திருப்பணி செய்வதற்கு முன் கூட்டம் நடத்திய போது ஒரு சில கிராம மக்கள் கேட்டுக் கொண்டதால், அறநிலைய துறையிடம் அனுமதி பெறப்பட்டு, உபயதாரர் வாயிலாக மதிற்சுவர் கட்டப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறும் அவிநாசி பெரிய கோவில் தேர்த்திருவிழாவுக்காக கொண்டுவரப்படும் மண் குதிரைகள், இனிமேல் வெளி பிரகாரத்தில் வைக்கப்படும். கோவிலில் வளர்ச்சி பணிகள் பிடிக்காத ஒரு சிலர் வேண்டுமென்றே, தகராறு செய்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.