பகல் பத்து ஒன்பதாம் நாள்; முத்து குறி அலங்காரத்தில் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சேவை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜன 2025 01:01
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் திருஅத்யயன வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல் பத்து ஒன்பதாம் திருநாளான இன்று முத்துக்குறி என்னும் அரையர் சேவைக்காக, நம்பெருமாள் - முத்து நேர் கிரீடம்; முத்து அங்கி அணிந்து, மகாலக்ஷ்மி பதக்கம், தங்க பூண் பவழ மாலை, சந்திர ஹாரம், மகரி, 2 வட முத்து சரம் ; முத்து அபய ஹஸ்தம்; முத்து கடி அஸ்தம் (இடது திருக்கை) முத்து கர்ண பத்திரம், முத்து திருவடி அணிந்து சேவை சாதித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். வரும் ஜன. 10ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு, வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும். அன்று முதல் ஜன. 20ம் தேதி வரை ராப்பத்து உற்ஸவம் நடைபெற உள்ளது. ஜன. 16ம் தேதி திருக்கைத்தல சேவையும், 17 ம் தேதி திருமங்கை மன்னன் வேடுபரி உற்ஸவமும் நடைபெறும். ஏகாதசி விழாவையொட்டி, இன்று முதல் ஜன. 19ம் தேதி வரை மூலவர் பெரிய பெருமாள் முத்தங்கியுடன் சேவை சாதிப்பார்.