Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடை அரங்கநாதர் கோவிலில் 10ம் தேதி ... பகல் பத்து ஒன்பதாம் நாள்; முத்து குறி அலங்காரத்தில் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சேவை பகல் பத்து ஒன்பதாம் நாள்; முத்து குறி ...
முதல் பக்கம் » செய்திகள்
பெருமாள் கோவில்களில் களைகட்டும் வைகுண்ட ஏகாதசி; 10ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு;
எழுத்தின் அளவு:
பெருமாள் கோவில்களில் களைகட்டும் வைகுண்ட ஏகாதசி; 10ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு;

பதிவு செய்த நாள்

08 ஜன
2025
11:01

பொள்ளாச்சி, உடுமலையில் உள்ள பெருமாள் கோவில்களில், நாளை வைகுண்ட ஏகாதசி விழா துவங்குகிறது; 10ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.


உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா, கடந்த, 31ம் தேதி, பகல்பத்து உற்சவத்துடன் துவங்கியது. தினமும், திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி, திருச்சந்த விருத்தம், பெரிய திருமொழி சேவை மற்றும் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்கார பூஜைகள் நடந்தன. நாளை, பத்தாம்நாள் திருவிழாவும், பெரிய திருமொழி, திருநெடுந்தாண்டகம் சேவை நடக்கிறது. வரும், 10ம் தேதி அதிகாலை, நம்பெருமாளுக்கு, பல்வேறு திரவியங்களால் திருமஞ்சனம், அலங்கார பூஜைகள் நடக்கிறது. காலை, 5:00 மணிக்கு, பரமபதவாசல் திறப்பு மற்றும் ஸ்ரீ வேங்டேச பெருமாள் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, ராப்பத்து உற்சவமும், தினமும், பெருமாள் ஆழ்வார் புறப்பாடும், 19ம் தேதி, நம்மாழ்வார் மோட்சம் நடக்கிறது. * பொள்ளாச்சி கடைவீதி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், மார்கழி மாத சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அதில், வைகுண்ட ஏகாதசி விழா வரும், 10ம் தேதி நடக்கிறது. நாளை (9ம் தேதி) விழா துவங்குகிறது. நாளை முதல், 11ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு மூலஸ்தானத்தில் மூலவருக்கு முத்தங்கி சேவை நடைபெறுகிறது.


வரும், 10ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு மேல், 5:00 மணிக்குள் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. சொர்க்கவாசலில் கட்டுவதற்கு காய், கனிகள், திரவிய பொருட்கள் அனைத்தும் நாளை (9ம் தேதி) காலை, 10:00 முதல் மாலை, 6:00 மணி வரை கோவிலில் வழங்கலாம் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


* ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா வரும், 10ம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி நாளை காலை, 10:31 மணிக்கு திருமஞ்சன சேவை, அலங்கார சேவை நடைபெறுகிறது.வரும், 10ம் தேதி அதிகாலை, 4:50 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு, சிறப்பு அலங்காரம், பூஜைகள், மஹா தீபாராதனை, தரிசன நிகழ்ச்சி நடக்கிறது.11ம் தேதி மதியம், 12:31 மணிக்கு அலங்காரம், தீபாராதனை, அன்ன பிரசாதம் வழங்கப்படுகிறது.


* டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோவிலில், வரும், 10ம் தேதி காலை, 4:00 மணிக்கு கோவில் பிரகாரத்தில், உற்சவர் புறப்பாடுடன் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

 
மேலும் செய்திகள் »
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் இருந்து பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் வீதி பஜனை ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் பஜனை மடத்தில் மார்கழி வழிபாடு நடக்கிறது. இங்குள்ள ... மேலும்
 
temple news
பந்தலூர்; பந்தலூர் அருகே நெல்லியாலம் சுற்று வட்டார பகுதிகளில், கடும் குளிரிலும் இளைஞர்கள் ராமர் பஜனை ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர பந்தலில், சாணக்யா குரு சேனல் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நடந்து வரும் மார்கழி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar