பதிவு செய்த நாள்
11
ஜன
2025
05:01
மகரம்: உத்திராடம் 2, 3, 4ம் பாதம்; நினைத்ததை சாதித்துக் காட்டும் தங்களுக்கு பிறக்கும் தை மாதம் யோகமான மாதம். உங்கள் நட்சத்திரநாதன் சூரியன் தை மாதம் முழுவதும் ஜென்ம ராசிக்குள் சஞ்சரிப்பதால், வேலைகளில் கவனம் செல்லும் முன்னேற்றத்தை நோக்கி நடை போடுவீர்கள். நடைபெறாமல் இருந்த வேலைகளை நடத்தி முடிப்பதற்காக முயற்சிகள் அதிகரிக்கும். இந்த நேரத்தில் சூரியனின் பார்வை ஏழாம் இடத்திற்கு உண்டாவதால் வாழ்க்கைத்துணையை அனுசரித்துச் செல்வது நல்லது. நண்பர்கள் எதிராக மாறக்கூடிய நிலை ஒரு சிலருக்கு ஏற்படும். கூட்டுத்தொழிலில் கவனமாக இருப்பது நல்லது. முடிந்தவரை வேலைகளில் மட்டும் கவனம் செலுத்தி முன்னேற்றத்தை நோக்கி செயல்படுவது அவசியம். மாதம் முழுவதும் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் வருமானம் அதிகரிக்கும். குடும்பக் குழப்பம் விலகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். புதிய தொழில் தொடங்க முயற்சி செய்து வந்தவர்களுக்கு அதற்குரிய வாய்ப்புகள் அமையும். வேலைத் தேடி வந்தவர்களின் கனவு நனவாகும். பதவியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், உயர்வு கிடைக்கும். முடிந்தவரை உடல் நலனில் கவனமாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் படிப்பில் அக்கறை உண்டாகும். விவசாயி கவனமாக செயல்படுவது அவசியம். உழைப்பாளர்களுக்கு வேலைபளு கூடும். அதே நேரம் தேவையான வரவும் இருக்கும்.
சந்திராஷ்டமம்: ஜன. 16, 17.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 19, 26, 28. பிப். 1, 8, 10.
பரிகாரம்: கருமாரி அம்மனை வழிபட கஷ்டம் போகும்.
திருவோணம்: எப்போதும் தெளிவுடன் செயல்பட்டு வரும் உங்களுக்கு முன்னேற்றமான மாதம். ராகு உங்கள் வேலைகளை எல்லாம் வெற்றியாக்குவார். எடுக்கின்ற முயற்சிகளில் லாபத்தை உண்டாக்குவார். வியாபாரத்தில் இருந்த தடை அகலும். வெளிநாட்டு முயற்சிகளை வெற்றியாக்குவார். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் தேடிவரும். எதிர்பார்த்த வரவு வரும். புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் வரவு அதிகரிக்கும். புதிய சொத்து, வீடு வாங்கும் கனவு நனவாகும். வங்கியில் கேட்ட பணம் கிடைக்கும். அரசு வழி முயற்சி சாதகமாகும். எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். ஜென்ம ராசிக்குள் சூரியன் சஞ்சரிப்பதால் முடிந்தவரை வேலைகளில் நிதானம் தேவை. அஷ்டம ஸ்தானத்திற்கு சனிப்பார்வை உண்டாவதால் உடல்நிலையிலும், பழக்க வழக்கங்களிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. நண்பர்களிடமும் வாழ்க்கைத் துணையிடமும் அனுசரித்துச்செல்வதால் நன்மை அதிகரிக்கும். வார்த்தைகளில் நிதானம் அவசியம். குடும்பத்தினருடைய விருப்பங்களை அறிந்து அதன்படி செயல்படுவீர்கள். புதிய நண்பர்கள் விஷயத்தில் எப்பொழுதும் கவனம் தேவை. ஒரு சிலருக்கு நண்பர்களால் பிரச்னை சங்கடம் ஏற்படலாம். பெரிய மனிதர்கள் தொடர்பும், அவர்களுடைய ஆதரவும் கிடைக்கும். அனைத்தையும் சமாளிப்பீர். நினைத்த வேலைகளை நடத்திக் கொள்வீர்கள். உங்கள் முயற்சி எளிதாக வெற்றியாகும். மாணவர்கள் படிப்பில் அக்கறை எடுத்துக் கொள்வதால் பொதுத் தேர்வை சந்திப்பதற்கு ஏதுவாக இருக்கும்.
சந்திராஷ்டமம்: ஜன. 17, 18.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 20, 26, 29. பிப். 2, 8, 11.
பரிகாரம்: திங்களூரில் குடிகொண்டுள்ள சந்திர பகவானை வணங்க நினைப்பது நடந்தேறும்.
அவிட்டம் 1, 2ம் பாதம்: எதிலும் வேகமாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் முன்னேற்றமான மாதம் இருக்கும். நட்சத்திரநாதன் வக்ரம் அடைந்துள்ள நிலையில் ராகு முன்னேற்றமான பலன்களை வழங்குவார். எடுக்கும் முயற்சி யாவும் வெற்றியாகும். நினைத்த காரியம் நடக்கும். செய்துவரும் தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். வியாபாரம் லாபம் தரும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். அரசியல்வாதிகள் நிலை உயரும். தொண்டர் பலம் அதிகரிக்கும். தலைமையை அனுசரித்துச் செல்வதால் நல்லது. உழைப்பாளர்கள் தங்கள் பணியில் கவனமாக இருப்பது சிறப்பு. அலுவலகத்தில் பணிபுரிவோர் தன்னுடன் பணிபுரிபவர்களுடன் அனுசரித்துச் செல்வது அவசியம். மாதம் முழுவதும் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன் பொருள் சேர்க்கை இருக்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். இதுவரை இருந்த நெருக்கடி, பிரச்னை எல்லாம் விலக ஆரம்பிக்கும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். ஒரு சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள். தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற வார்த்தைக்கேற்ப இந்த தை மாதம் உங்களுக்கு அத்தனை நன்மைகளும் ஏற்படுத்தும். வாழ்க்கைக்குரிய வழிகள் தெரியும். பாக்கிய ஸ்தானத்தில் ஞான மோட்சக்காரகன் சஞ்சரிப்பதால் பெரிய மனிதர்கள் தொடர்புகள் கிடைத்து நடத்த முடியாத வேலைகளை நடத்தி முடிப்பீர்கள் தெய்வ அருளும் இக்காலத்தில் உங்களுக்கு கிடைக்கும். தடைபட்ட முயற்சி வெற்றியாகும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. விவசாயி மாதம் முழுவதும் விளைச்சலில் கவனமாக இருக்க வேண்டும்.
சந்திராஷ்டமம்: ஜன. 18.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 17, 26, 27. பிப். 8, 9.
பரிகாரம்: சுப்ரமணியரை வழிபட சுபிட்சம் உண்டாகும்.