மலையாண்டவர் கோவில் கரிநாள் விழாவில் தெப்பல் உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜன 2025 04:01
நடுவீரப்பட்டு; சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் கரிநாள் திருவிழாவில் தெப்பல் உற்சவம் நடந்தது. சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் கோவிலில் நேற்று கரிநாள் திருவிழா நடந்தது விழாவை முன்னிட்டு நேற்று விநாயகர்,ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்தி உற்சவர்களுக்கு 108 சங்கு அபிஷேகம் நடந்து மகா தீபாராதனை நடந்தது.அன்று இரவு பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்தது. தொடர்ந்து இன்று அதிகாலை 5:00 மணிக்கு கோவில் எதிரில் உள்ள குளத்தில் விநாயகர் தெப்பல் அடிக்கும் உற்சவம் நடந்தது.தெப்பல் உற்சவத்தில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் மற்றும் நிர்வாகக்குழுவினர் செய்திருந்தனர்.