புதுச்சேரி: மணக்குள விநாயகர் கோவிலில், "மரத் தங்கத் தேர் வீதியுலா நேற்றிரவு நடந்தது. மணக்குள விநாயகர் கோவிலில், கார்த்திகை மாத திருவாதிரை நட்சத்திர நாளையொட்டி, உற்சவர் விநாயகர் ஆண்டிற்கு ஒரு முறை, "மர தங்கத் தேரில் வீதியுலா வருவது வழக்கம். இந்தாண்டு, மரத் தங்கத் தேர் வீதியுலா நேற்றிரவு நடந்தது. மரத் தங்கத் தேரில், மலர்களால் அலங்கரித்த விநாயகர், நேரு வீதி உள்ளிட்ட வீதிகளில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.