செஞ்சி ஒன்றியம் மழவந்தாங்கல் பூரணி பொற்கலை சமேத ஐயனாரப்பன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதை முன்னிட்டு 19ஆம் தேதி மாலை 4.00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமமும், மாலை 6.00 மணிக்கு வாஸ்த்து சாந்தி, பிரிவேச பலி, முதல் கால யாகசாலை பூஜை, 108 திரவிய ஹோமம், பூர்ணாஹுதியும், தீபாரதனையும் நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, கோ பூஜை, மகா சங்கல்பம், எஜமானர் பூஜை, ரக்ஷா பந்தனம், நாடி சந்தனம், தத்துவர்ச்சனையும், 9.45 மணிக்கு மகாபூர்ணாஹுதியும், தொடர்ந்து கலச புறப்பாடும், 10.15 மணிக்கு பூரணி, பொற்கலை சமேத ஸ்ரீ ஐயனாரப்பனுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகமும் நடந்தது. இதில் மஸ்தான் எம்.எல்.ஏ., ஒன்றிய சேர்மன் விஜயகுமார், ஒன்றிய கவுன்சிலர் பச்சையப்பன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.