Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மந்தை பகவதி அம்மன் கோவிலுக்கு ... தென்கலை சீனிவாச பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம் தென்கலை சீனிவாச பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் 2ம் தேதி கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் 2ம் தேதி கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

31 ஜன
2025
10:01

கடலுார்; கடலுார், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நாளை மறுநாள் 2ம் தேதி நடக்கிறது. கடலுார் அடுத்த திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும். இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 2012ம் ஆண்டு நடந்தது. தற்போது 12 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் நடந்தது. திருப்பணிகள் முடிந்த நிலையில், கும்பாபிஷேகம் வரும் 2ம் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் யாக சாலை பூஜைகள் துவங்கியது. நேற்று காலை இரண்டாம் கால யாக சாலை பூஜை, மாலை மூன்றாம் கால யாக சாலை பூஜை நடந்தது. இன்று (31ம் தேதி) காலை 7:00 மணிக்கு நான்காம் கால யாக சாலை பூஜை, மாலை 5:00 மணிக்கு 5ம் கால யாக சாலை பூஜை நடக்கிறது. நாளை 1ம் தேதி காலை 5:30 மணிக்கு 6ம் கால யாக சாலை பூஜை, 10:30 மணிக்கு மகா சாந்தி திருமஞ்சனம், மாலை 5:30 மணிக்கு 7ம் கால யாக சாலை பூஜை நடக்கிறது. வரும் 2ம் காலை விஸ்வரூப தரிசனம், ஹோமம், பிரதான மகா பூர்ணாஹூதி நடந்து, காலை 9:00 மணி முதல் 10:30 மணிக்குள் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, வேத, திவ்ய பிரபந்த சாற்று மறை நடக்கிறது. இரவு தேவநாதசுவாமி உபய நாச்சியாருடன் வீதியுலா நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
இஸ்ரேலில் பிறந்த இளைஞர் ஒருவர், இந்திய குருகுலத்தில் 12 ஆண்டுகள் தங்கி வேதக் கல்வி பயின்று, சனாதன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar