தென்கலை சீனிவாச பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜன 2025 10:01
புதுச்சேரி; முத்தியால்பேட்டை காந்தி வீதி தென்கலை சீனிவாச பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில் நேற்று முன்தினம் மூன்று கருட சேவை உற்சவம் நடந்தது. முத்தியால்பேட்டை, காந்தி வீதியில் உள்ள தென்கலைசீனிவாச பெருமாள் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த 25ம் தேதி துவங்கியது. இதையொட்டி அன்று காலை திருமஞ்சனம், கொடியேற்றம், தீபாராதனை சாற்றுமுறை நடந்தது. 26ம் தேதி முதல் தினமும் சுவாமிக்கு சிறப்புஅபி ேஷக ஆராதனை, சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மூன்று தங்க கருடசேவை உற்சவம் நடந்தது. முன்னதாக பெருமாளுக்கு சிறப்பு அபி ேஷகம் ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வரும் 3ம் தேதி காலை 6:00 மணிக்கு திருத்தேர் உற்சவம், இரவு தீர்தவாரி நடக்கிறது.ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி பாலகிருஷ்ணன் செய்துள்ளார்.