மகா கும்பமேளாவில் குவியும் பக்தர்கள்; 31.46 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01பிப் 2025 11:02
பிரயாகராஜ் ; இந்தியாவின் ஒற்றுமையின் அடையாளமானதும், சனாதனத்தின் பெருமையானதுமான மகா கும்பமேளா 2025, பிரயாகராஜ் விழாவின் திரிவேணி சங்கமத்தில் இன்று 1.82 கோடிக்கும் அதிகமான பக்தர்களும், இதுவரை 31.46 கோடிக்கும் அதிகமான பக்தர்களும் புனித நீராடி தரிசனம் செய்துள்ளனர். திரிவேணி சங்கமத்தில் பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கானோர் இங்கு நீராடி வருகின்றனர். இந்நிலையில் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் 77 நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் உட்பட 118 குழுகள் கலந்து கொனண்டனர். நேற்று 1 மில்லியனுக்கும் அதிகமான கல்பவாசிகளும், 4.42 மில்லியன் யாத்ரீகர்களும் நீராடினர். ஜனவரி 31 நிலவரப்படி, 314.6 மில்லியனுக்கும் அதிகமானோர் திரிவேணி சங்கமத்தில் நீராடியுள்ளனர். இன்றும் பல்வேறு பகதிகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.