Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் பிரச்னையில் அரசு ...  பூமிக்குள் இருந்து பழமையான சுவாமி சிலைகள் கண்டெடுப்பு பூமிக்குள் இருந்து பழமையான சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாவூற்று வேலப்பர் கோயிலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த பக்தர்கள் எதிர்பார்ப்பு
எழுத்தின் அளவு:
மாவூற்று வேலப்பர் கோயிலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த பக்தர்கள் எதிர்பார்ப்பு

பதிவு செய்த நாள்

01 பிப்
2025
11:02

ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. கோயில் வளாகத்தில் கூடுதல் வசதிகள் கிடைக்க பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தெப்பம்பட்டியை அடுத்து மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள இக்கோயில் ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மருத மரங்களின் வேர்ப்பகுதியில் இருந்து வரும் வற்றாத சுனை கோயிலின் தனிச்சிறப்பு. விரதம் மேற்கொண்டு கோயிலுக்கு வரும் பக்தர்கள் சுனையில் நீராடி வேலைப்பரை வழிபடுவதால் தீராத வினைகள் தீரும் என்பதை நம்பிக்கையாக கொண்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல் தேதியில் நடைபெறும் விழா, அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களில் நடைபெறும் விழாக்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுகின்றனர். தை, ஆடி, புரட்டாசி அமாவாசை, மாதாந்திர கார்த்திகை நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தற்போது கோயில் வளாகத்தில் பழுதான நிலையில் உள்ள சமுதாயக் கூடத்தை பக்தர்கள் பயன்படுத்துகின்றனர். குடிநீர் கழிப்பறை வசதிகளும் கோயில் நிர்வாகம் சார்பில் செய்து தரப்பட்டுள்ளன. நாளுக்கு நாள் பெருகும் பக்தர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப வசதிகள் இல்லை. குறுகிய இடமாக உள்ள சுனையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும்போது அனைவருக்கும் சிரமம் ஏற்படுகிறது. மலைக்கோயில் செல்ல ஒரு வழிப்பாதையாக இருப்பதால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் விட்டு செல்லும் குப்பையை மலைப்பகுதியில் அப்புறப்படுத்த முடியாமல் வனத்துறை, கோயில் நிர்வாகம் திணறுகின்றன. கோயில் வளாகத்தில் அடிப்படை வசதிகள் குறித்து பக்தர்கள் கூறியதாவது:


எஸ்.நவநீதன், தேனி: கோயிலில் விசேஷ நிகழ்ச்சி நடத்துபவர்கள் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்துள்ளது. நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு போதுமான மண்டப வசதி இல்லை. மழைக்காலங்களில் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர். விசேஷ நாட்களில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கூடும் போது, ஆண்கள், பெண்கள் குளிப்பதற்கு தனித்தனி இட வசதி இல்லை. பெண்கள் உடை மாற்றுவதற்கும் சிரமம் உள்ளது. கோயில் வளாகத்தில் ஆண்டு முழுவதும் சுனையில் கிடைக்கும் நீரை தேக்குவதற்கு குளம் அமைத்து குளத்தில் பக்தர்கள் நீராடுவதற்கு வசதி ஏற்படுத்த வேண்டும்.


வி.முத்து இருளன், ஏத்தக்கோவில்: தற்போதுள்ள கழிப்பறை வசதி கூட்டம் அதிகமாகும் நாட்களில் போதுமானதாக இல்லை. திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்தி சுகாதார பாதிப்பு ஏற்படுத்துகின்றனர். சுனை அருகே கூட்டம் அதிகமாகும் போது அசுத்தமாக்கி புனிதத்தை கெடுத்து விடுகின்றனர். பக்தர்கள் கோயில் வளாகத்திற்கு கொண்டுவரும் பொருட்களுக்கு வனத்துறை, கோயில் நிர்வாகம் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். முடி காணிக்கை மண்டபம் அத்திமரத்தடியில் ஆண்டு முழுவதும் சுனையாகவும், மழைக்காலத்தில் அருவியாகவும் வரும் நீரை தேக்கி வைத்து ஆண்டு முழுவதும் பயன்படுத்துவதற்கு வசதி ஏற்படுத்த வேண்டும். சுனையில் வரும் மூலிகைத்தன்மையுள்ள புனிதமான நீரை பக்தர்கள் அனைவரும் சுத்தமான முறையில் பயன்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.


கோயில் நிர்வாகத்தினர் கூறியதாவது: கோயில் வளாகத்தில் பக்தர்கள் வசதிக்காக பொங்கல் மண்டபம், திருமண மண்டபம் தேவையான இடங்களில் சிமென்ட் தளம் ஆகியவை அமைக்க திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டுள்ளது. மலைக் கோயிலுக்கு செல்லும் பாதையை இரு வழி பாதையாக்கவும் இதற்கான செலவுகளை உபயதாரர்கள் மூலம் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. மலைப்பகுதியில் கோயிலில் குவியும் குப்பை வனத்துறையினர் உதவியுடன் அகற்றப்படும்.கோயில் பகுதிக்கு பக்தர்கள் கொண்டு செல்லும் பொருட்களுக்கு கட்டுப்பாடு விதிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கோயில் வளாகத்தில் குளம் அமைத்து நீரை தேக்கி பயன்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். இவ்வாறு தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
லக்னோ: மஹா கும்பமேளாவில் வசந்த பஞ்சமி தினத்தில், ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். பல்வேறு ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், பூபதி திருநாள் எனப்படும் தை தேர் திருவிழா, கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
பிரயாக்ராஜ்; பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவை முன்னிட்டு திருப்பதி தேவஸ்தானம் அமைத்த ஸ்ரீவாரி சம்பத் ... மேலும்
 
temple news
இது பசந்த் பஞ்சமி, ஸ்ரீ பஞ்சமி என்றும் வழங்கப்படுகிறது. ஒருவர் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானம். அதை ... மேலும்
 
temple news
திருச்சி; மண்ணச்சநல்லுார் அருகே தண்ணீர் தொட்டி கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில், பழமையான மூன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar