திருவந்திபுரம் தேவநாதசுவாமி தங்க சேஷ வாகனத்தில் வீதியுலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03பிப் 2025 05:02
கடலுார்; திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில், தங்க சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.
கடலுார் அடுத்த திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் 108 வைணவ தளங்களில் முதன்மை பெற்றதாகும். இக்கோவிலில் நேற்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. அன்றைய தினம் இரவு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேவநாத சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தங்க சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் தேவநாத சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், முக்கிய மாட வீதிகள் வழியாக சுவாமி வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரணிதரன், உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன் செய்திருந்தனர்.