Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவந்திபுரம் தேவநாதசுவாமி தங்க ... வசந்த பஞ்சமி; அயோத்தி ராமர் கோவிலில் குவிந்த பக்தர்கள்.. பாலராமரை தரிசித்த பரவசம் வசந்த பஞ்சமி; அயோத்தி ராமர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சூலூர் மேற்கு மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
சூலூர் மேற்கு மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

பதிவு செய்த நாள்

03 பிப்
2025
05:02

சூலூர்; சூலூர் மேற்கு மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.


சூலூர் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள மேற்கு மாகாளியம்மன் கோவில் பழமையானது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் கருவறை மற்றும் அர்த்த மண்டபம் கருங்கற்களினால் அமைக்கப்பட்டு திருப்பணிகள் நடந்தன. கும்பாபிஷேக விழா, கடந்த, 30 ம்தேதி திருவிளக்கு வழிபாடு, விநாயகர் வழிபாட்டுடன் துவங்கியது. 31 ம்தேதி காலை, கணபதி ஹோமம், காப்பு கட்டுதல், மாலை முளைப்பாலிகை மற்றும் தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. இரவு முதல் கால ஹோமம் நடந்தது. மறுநாள் விமான கலசம் வைத்தல், அஷ்ட பந்தன மருந்து சாத்தப்பட்டது. நேற்று காலை, நான்காம் கால ஹோமம், பூர்ணாகுதி முடிந்து புனிதநீர் கலசங்கள், மேள, தாளத்துடன் கோவிலை வலம் வந்தன. 10:00 மணிக்கு, ஸ்ரீ மாகாளியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மகா அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar