பதிவு செய்த நாள்
04
பிப்
2025
01:02
ஊட்டி; ஊட்டி காந்தள் பழமை வாய்ந்த ஸ்ரீ மூவுலக அரிசி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.
இக்கோவில் இருக்கும் இடத்திற்கு வடக்கு திசையில், ஒரு கிணறு இருந்தது. பழங்குடிகள் அக்கிணற்றில் தண்ணீர் எடுக்க செல்லும் நேரத்தில், ஒரு பெண் துணைக்கு வந்து, தற்போது கோவிலின் கர்பகிரஹம் அமைந்திருக்கும் இடத்துக்கு சென்றுள்ளார். தங்களை தொடர்ந்து பாதுகாத்து வந்த பெண்ணை மக்கள் தாய்போல கருதி, அம்மன் கோவில் கட்டி வழிப்பட்டுள்ளனர். அந்த வழிபாட்டை, அப்பகுதியில் வாழ்ந்த ‘கசவர்’ என்ற பழங்குடிகள் நடத்தி வந்துள்ளனர். கோவில் கட்ட உதவிய ஆங்கிலேயர் நவீன ஊட்டியை உருவாக்கிய ஜான் சல்லிவன் காலத்தில், முதல் கல்பங்களா கட்டும் போது, காந்தள் வழியாக மைசூருக்கு குதிரையில் சென்ற ஜெனரல்வாப்சர் என்பவர் மூலம், இந்த கோவில் குறித்து அறிந்த சல்லிவன், இதனை புனரமைக்க தேவையான மரம், கற்களை பழங்குடியினரிடம் கொடுத்துள்ளார். அதன்பின், 1882ல் மீண்டும் கோவில் புதுப்பிக்கப்பட்டது. அப்போது நடந்த ஆய்வில் ‘பழங்குடிகள் கட்டிய இந்த கோவில், 500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம்,’ என, கூறப்பட்டது. 1940ல் கட்டப்பட்ட ராஜகோபுரம் இந்த கோவிலில் கடந்த, 1940 ஆண்டு, 500 ரூபாய் மதிப்பில் ராஜாகோபுரம் கட்டப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் நடந்துள்ளது. 1972ம் ஆண்டு கோவில், அறநிலையத்துறை வசம் சென்றபிறகு கும்பாபிஷேகம் நடந்தது. மீண்டும், 1992 மற்றும் 2006ம் ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தற்போது, அறநிலையத்துறை சார்பில், கடந்த 2ம் தேதி மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.