மூலநாதர் கோவிலில் ரதசப்தமி பூஜை; சூரிய பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04பிப் 2025 02:02
பாகூர்; பாகூரில் உள்ள 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவிலில் இன்று ரதசப்தமியொட்டி சிறப்பு பூஜை நடந்தது. அதனையொட்டி, இன்று காலை சூரிய பகவானுக்கு, பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.