Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பேரூர் பட்டீஸ்வரர் கோவில் ... பேரூர் ஆதினம் மருதாசல அடிகளாரின் 65வது நாண் மங்கல விழா பேரூர் ஆதினம் மருதாசல அடிகளாரின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வாரணாசியில் அன்னபூர்ணேஸ்வரியின் பிராண பிரதிஷ்டா மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
வாரணாசியில் அன்னபூர்ணேஸ்வரியின் பிராண பிரதிஷ்டா மகா கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

07 பிப்
2025
12:02

வாரணாசி;  காசியின் பகவதி அன்னபூர்ணேஸ்வரியின் பிராண பிரதிஷ்டா மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி சன்னிதானம் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.


கடந்த 1977ம் ஆண்டில், வாரணாசி தேவி அன்னபூர்ணா கோவிலின் கும்பாபிஷேகத்தை சிருங்கேரி சாரதா பீடத்தின் 35 வது சங்கராச்சாரியார் அனந்தஸ்ரீ விபூஷித ஜகத்குரு ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த மஹாஸ்வாமிஜி நடத்தினார். தற்போதைய சங்கராச்சாரியார் அனந்தஸ்ரீ விபூஷித ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்த மஹாஸ்வாமியும் அவருடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை இணைந்து நடத்தினார். கடந்த 1994ல், தனது அகில பாரத விஜய யாத்திரையின் ஒரு பகுதியாக, ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மஹாஸ்வாமி வாரணாசி வருகை தந்து, மனித குலத்தின் நலனுக்காக பகவான் ஸ்ரீ காசி விஸ்வநாதரை வழிபட்டார். வேத சபைகள், சாஸ்திர சபைகள் போன்ற பல தர்ம நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. தற்போது மீண்டும் வாரணாசியில் அன்னபூரணி தேவிக்கு, மஹா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். பாரதம் முழுவதிலும் இருந்து 485 வேத பண்டிதர்கள், ரித்விக்குகள் சஹஸ்ரசண்டி மஹாயஜ்ஞம், கோடி கும்குமார்ச்சனை, மஹாருத்ர மஹாயஜ்ஞம், சதுர்வேத பாராயணம் மற்றும் லோக கல்யாணத்திற்கான புராண பாராயணம் உட்பட பல புனிதமான தர்ம நிகழ்வுகளில் பங்கேற்றனர்.



வாரணாசி அன்னபூர்ணா மந்திரின் மஹந்த், ஸ்ரீ சங்கர்புரி மஹராஜ், சிருங்கேரிக்கு விஜயம் செய்து, ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மஹாஸ்வாமிஜியிடம் கும்பாபிஷேகத்தை நடத்தும்படி கேட்டுக் கொண்டார். அனைத்து சீடர்கள் மீதும் அபரிமிதமான கருணை கொண்ட ஜகத்குரு, தனது உத்தராதிகாரி ஜகத்குரு சங்கராச்சாரியா ஸ்ரீ விதுசேகர பாரதி மஹாஸ்வாமிஜியை கும்பாபிஷேகம் நடத்தும்படி வழிநடத்தினார். அதன்படி, 37வது சங்கராச்சாரியார், அனந்தஸ்ரீ விபூஷித ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதி மஹாஸ்வாமிஜி, தற்போது வாரணாசியில் அன்னபூரணி தேவியின் பிராணபிரதிஷ்டம் மற்றும் மஹாகும்பாபிஷேகம் மற்றும் விஸ்வநாதருக்கு சிறப்பு பூஜை நடத்தினார். பிரயாக்ராஜில் நடந்து வரும் கும்பமேளாவில் ஒரு வாரம் தெய்வீக பிரசன்னத்திற்குப் பிறகு இப்போது வாரணாசி க்ஷேத்திரத்தை வந்தடைந்துள்ள அவர், சிருங்கேரி சாரதா பீடாதிபதிக்கு விசேஷ பிரசாதமாக புதிதாக கட்டப்பட்டுள்ள தங்க சிகர கோபுர கும்பாபிஷேகத்தையும் தனது அமிர்த கரங்களால் நடத்துவார். ஆயுத மோதக கணபதி ஹோமம், சஹஸ்ரசண்டி மஹா யஜ்ஞம், கோடி குங்கும அர்ச்சனை, மஹாருத்ர மஹாயஜ்ஞம், சதுர்வேத பாராயணம், மற்றும் லோக கல்யாண பாராயணம் உட்பட பல புனிதமான தர்ம நிகழ்வுகளில், நாடு முழுவதிலும் இருந்து, 485 வேத பண்டிதர்கள், மற்றும் ஆன்மிக பெரியோர், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


பக்தர்களுக்கு அழைப்பு: வாரணாசி விஜய யாத்திரைக்குப் பின், ஜகத்குரு சங்கராச்சாரியார், புனித அயோத்தியில் பகவான் ஸ்ரீராமச்சந்திரரை தரிசனம் செய்து, கோரக்பூரில் அவரது யாத்திரையை நிறைவு செய்வார். வாரணாசி மற்றும் இதர புனிதத் தலங்களில் ஜகத்குருவின் விஜய யாத்திரையின்போது, அவரது தரிசனத்தைப் பெற்று, பகவான் ஸ்ரீ விஸ்வநாதர் மற்றும் ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி ஆகியோரின் கருணையைப் பெறுவதற்கு பக்தர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,-  இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான கருணாசாமி கோவிலில், சூரிய பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் திருநாகேஸ்வரம் அருகே அமைந்துள்ள ஒப்பிலியப்பன் ... மேலும்
 
temple news
புதுச்சேரி; தீர்த்தவாரியில் எழுந்தருளிய மயிலம் சுப்ரமணியர் சுவாமி, தீவனுார் லட்சுமி நாராயணபெருமாள் ... மேலும்
 
temple news
 திருப்போரூர; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் துணை கோவிலான கொளத்துார் கல்யாண ரங்கநாதர் பெருமாள் ... மேலும்
 
temple news
விழுப்புரம்; அனிச்சம்பாளையத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar