தைப்பூச படையல்; சாதத்தில் வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07பிப் 2025 03:02
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே அணைக்கரைப்பட்டியில் தைப்பூச படையல் விழா நடந்தது. இங்குள்ள சித்திவிநாயகர், பாலமுருகன் கோயிலில் தைப்பூச படையல் விழாவை முன்னிட்டு பிப். 6 ம் தேதி பால்குட விழா நடந்தது. கிராம மந்தையில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்துவந்து சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்தனர். அன்று மாலை 5:00 மணிக்கு தீர்த்த வழிபாடு நடந்தது. இன்று காலை 10:00 மணிக்கு அன்னதானத்திற்காக சமைக்கப்பட்ட சாதத்தில் வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது விழாவிற்கான ஏற்பாடுகளை அணைக்கரைப்பட்டி கிராமத்தினர் செய்திருந்தனர்.